கொரோனா வைரஸ், ஒட்டுமொத்த உலகையே அச்சுறுத்தி நிறுத்தி வைத்துள்ளது. இதில் இந்தியாயை பொறுத்தவரை நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.
கொரோனாவிற்கு தற்போதைய மருந்தாக கருதப்படுவது 'சோசியல் டிஸ்டன்சிங்' அதாவது மக்கள் ஒவ்வொருவர் விலகியிருப்பது. இதனால் இந்தியாவில் மார்ச் 2 முதல் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. இதனால் பல வகையில் இந்தியா முடங்கியுள்ளது. பொருளாதார ரீதியாக மக்கள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர்.
![]() |
| Kajal Aggarwal |
இந்நிலையில் நடிகை காஜல் அகர்வால், வணிகர்கள் இழப்பிலிருந்து மீள யோசனை ஒன்றைக் கொடுத்துள்ளார். இதுக்குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியுள்ளதாவது, " கரோனா தொற்று அழியும்போது, ஆபத்து முடியும்போது, நமது நாட்டின் நலனுக்காக ஏதாவது ஒன்றைச் செய்வோம். இந்தியாவில் நமது விடுமுறைகளைச் செலவிடுவோம், நம் பகுதியிலிருக்கும் உணவகங்களில் சாப்பிடுவோம், நமது பகுதியில் காய்கறி, பழங்களை வாங்குவோம். இந்திய உற்பத்தியாளர்களின் துணிகளை, காலணிகளை வாங்கி உள்ளூர் வியாபாரிகளுக்கு ஆதரவு தருவோம். நமது உதவியின்றி இந்த வியாபாரிகள் மீண்டும் எழுந்து நிற்கக் கஷ்டப்படுவார்கள். ஒருவருக் கொருவர் உதவி செய்து, முன்னேற நமது பங்கை நாம் செய்வோம்".
Like & Share your friends


