header ads

'இந்த நேரத்தில் இந்த வதந்தி முக்கியமா' கீர்த்தி சுரேஷ் ஆதங்கம்

இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ், அறிமுகமாகிய குறைந்த காலக்கட்டத்திலே விஜய், சூர்யா படங்கள் என முன்னணி நடிகையாக வலம்வரத் துவங்கினார்.



தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நடிக்க தொடங்கிய கீர்த்தி சுரேஷிற்கு 'மகாநடி' படம் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்று தந்தது. தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் - சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகி வரும் 'அண்ணாத்த', பென்குயின், தெலுங்கில் 'மிஸ் இந்தியா', 'ரங்க்டே' உள்ளிட்ட படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் இதனிடையே கீர்த்தியின் தந்தை சுரேஷ்குமார் அவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு எடுத்திருப்பதாகவும், பாஜகவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் மகனுடன் தான் கீர்த்திக்கு திருமணம் நடக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி  பரபரப்பை ஏற்படுத்தின.



இதுக்குறித்து கீர்த்தி சுரேஷ் கூறியுள்ளதாவது, "இந்த செய்தி எனக்கே வியப்பாக உள்ளது. இது எப்படித் தான் துவங்கியது என்று தெரியவில்லை. தற்போதைக்கு திருமணம் செய்து கொள்ளும் ஐடியா எனக்கு இல்லை என கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். மேலும், தற்போது நாடு இருக்கும் சூழ்நிலையில் இதுபோன்ற பொய்யான வதந்திகள் பரப்புவது முக்கியமல்ல எனவும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.


Like & Share your friends